அந்தப் பையன வச்சிக்கிட்டு உங்களால ஒன்னும் பண்ண முடியாது ! இளம் இந்திய வீரரை தவறாக எடை போடும் ! ஆஸ்திரேலிய வீரர் ஜோ பேர்ன்ஸ் !
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் முன்னணியில் இருந்த இந்திய அணி வெற்றியை நோக்கி நடந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென 36 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து மோசமான தோல்வியை தழுவியது.
இந்த போட்டி முற்றிலுமாக பேட்ஸ்மேன்கள் செய்த தவறால் கிடைத்த தோல்வியா குறிப்பாக துவக்க வீரர் பிரித்வி ஷா மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்தது தன்னை நிரூபிக்கும் வகையில் ரன்கள் அடித்து நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முட்டை ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். குறிப்பாக இரண்டு இன்னிங்சிலும் தனது விக்டெகளை பறிகொடுத்து பரிதாபமாக வெளியேறினார். இந்நிலையில் பிரித்வி ஷா குறித்து பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ்.
இவர் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்வி ஷா எனக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு கண்டிப்பாக ஆலோசனை வழங்க மாட்டேன். நான் எதிர்பார்ப்பது போல் கண்டிப்பாக ரன்கள் அடிக்க மாட்டார். எந்த அளவிற்கு விளையாடுவார் என்பது எனக்கு தெரியாது.
நான் அவரை தொடர்ந்து பார்த்ததில்லை. இந்தியாவிற்காக அவர் விளையாடுகிறார் என்றால் தரமான வீரராக தான் இருப்பார். தொடர் முடிந்த பின்னர்தான் அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவேன். ஆனால் தொடர்ந்து அவர் இப்படித்தான் ஆடிக்கொண்டு இருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை” என்று தெரிவித்திருக்கிறார் ஜோ பேர்ன்ஸ்.