இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் ஜாண்டி ரோட்ஸ்..? மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் ஜாண்டி ரோட்ஸ்..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜாண்டி ரோட்ஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட தேர்வுகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் உலகின் தலைசிறந்த பீல்டராகக் கொண்டாடப்படும் தென் ஆப்பிரிக்காவின் ஜான்ட்டி ரோட்ஸ் இந்திய பீல்டிங் பயிற்சியாளராக விண்ணப்பம் செய்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் ஸ்போர்ட்ஸ்டாருக்கு உறுதி செய்துள்ளது.

“ரோட்ஸ் விண்ணப்பம் செய்துள்ளார். அனைத்து கால தலைசிறந்த பீல்டர் அவர். இவர் அல்லாது இன்னும் சிலரும் களத்தில் உள்ளனர்” என்று  கூறியுள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி ஜூலை 30.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பீல்டிங் பயிற்சியாளராக ஜான்ட்டி ரோட்ஸ் ஓரளவுக்கு சோம்பேறியாக நகரும் ரோஹித் சர்மாவின் கேட்சிங்கையே முன்னேற்றியுள்ளார் என்றே கூற வேண்டும்.

தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மகேலா ஜெயவர்தனே, டாம் மூடி ஆகியோரும் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் உலாவுகின்றன. ஆனால் ரோட்ஸ் தவிர இத்தகைய செய்திகளை பிசிசிஐ உறுதி செய்யவில்லை.

 

Mohamed:

This website uses cookies.