ருத்துராஜ் வைத்திருந்த ஆரஞ்சு தொப்பியை பறித்த ஜோஸ் பட்லர்.. இது செம்மை ஃபீலா இருக்கு – ஜோஸ் பட்லர் பேட்டி!

இந்த சீசனில் முதல்முறையாக ஆரஞ்சு தொப்பியை பெற்றபிறகு, அதைப்பற்றி இன்னிங்ஸ் முடிந்தவுடன் பகிர்ந்து கொண்டார் ஜோஸ் பட்லர்.

இந்த வருட ஐபிஎல் சீசனின் 11ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யசஷ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து, 51 பந்துகளில் 73 ரன்கள் அடுத்து ஆட்டமிழந்தார். 3 போட்டிகளில் இரண்டாவது அரைசதம் அடிக்கிறார். இன்று 73 ரன்கள் அடித்ததன் மூலம், ருத்துராஜ் கெய்க்வாட் வசம் இருந்த ஆரஞ்சு தொப்பியையும் தன்வசப்படுத்தியிருக்கிறார்.

 

 

இன்னிங்ஸ் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் சேர்த்தது. இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஆரஞ்சு தொப்பியை பெற்றுக் கொண்டு அதைப் பற்றி பேசிய ஜோஸ் பட்லர் கூறுகையில்,

“சென்ற போட்டியில் எனது விரலில் காயம் ஏற்பட்டதால் தையல் போட்டுக்கொண்டேன். இன்று ஆட முடியுமா என்று சந்தேகத்தில் இருந்தேன். நாளின் துவக்கத்தில் கையில் வலி பெரிதாக இல்லாதவாறு உணர்ந்தேன். இதனால் ஆடுகிறேன் என்று கூறினேன். இன்று விளையாடி அணிக்கு நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தது மகிழ்ச்சி. மேலும் ஆரஞ்சு தொப்பியை பெற்றது நல்ல உணர்வாக இருக்கிறது. சீசன் துவக்கத்தில் நன்றாக விளையாடுவதற்கு கிடைத்த வெகுமதியாக பார்க்கிறேன். இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது தான் இதைவிட முக்கியம்.

டெல்லி அணியின் ஸ்பின்னர்கள் நன்றாக கட்டுப்படுத்தினார்கள். எங்களது அணியில் சஹல் மற்றும் அஸ்வின் இருவரும் இருக்கின்றனர். அவர்களும் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஸ்பின்னர்கள் பவர்-பிளே ஓவர்களில் பந்துவீசுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பந்து நன்றாக ஸ்கிட் ஆகிறது.” என்றார் பட்லர்.

ருத்துராஜ் கெய்க்வாட் 2 போட்டிகளில் 2 அரைசதங்கள் உட்பட 149 ரன்கள் அடித்திருக்கிறார். ஜோஸ் பட்லர் மூன்று போட்டிகளில் 152 ரன்கள் அடித்துள்ளார். 3 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளார்.

அடுத்ததாக வரவிருக்கும் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில், ருத்துராஜ் இதைக்கடந்து மீண்டும்  ஆரஞ்சு தொப்பியை பெறுவதற்கு அநேக வாய்ப்புகளும் இருக்கின்றன.

Mohamed:

This website uses cookies.