பட்டையகிளப்பிட்டு இருந்த மனுஷனுக்கா இப்படி நடக்கணும்… ராஜஸ்தான் அணியிலிருந்து விலகும் ஜோஸ் பட்லர்; என்ன நடந்தது? – வெளியான ஷாக் ரிப்போர்ட்!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ராஜஸ்தான் நட்சத்திரம் ஜோஸ் பட்லர் விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தகவல்கள் வந்திருக்கிறது. இது இன்னும் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த வருட ஐபிஎல் சீசனின் எட்டாவது லீக் போட்டி கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

பீல்டிங் செய்து கொண்டிருக்கையில், பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷாருக் கான் அடித்த பந்தை பவுண்டரி திசையில் நின்றுகொண்டிருந்த ஜோஸ் பட்லர் கேட்ச் எடுத்தார். அப்போது இவரது விரலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக இன்னிங்ஸ் முடிந்தவுடன் விரலில் தையல் போட்டுக்கொண்டு பேட்டிங் வந்தால்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எப்போதும் ஓபனிங் இறங்கும் ஜோஸ் பட்லர், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது ஓபனிங் இறங்கவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபனிங் செய்தார். அதற்கு விரலில் தையல் போடுவதற்கு தாமதம் ஆனது தான் காரணம் என்று சஞ்சு சாம்சன் குறிப்பிட்டார். மேலும் ஜோஸ் பட்லர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றும் சஞ்சு சாம்சன் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜோஸ் பட்லர் விரலில் ஏற்பட்ட காயம் குணமடைவதற்கு இன்னும் ஒரு வாரகாலம் ஆகும் என்று அணியின் மருத்துவர்கள் தெரிவித்ததால், அடுத்த ஒருவார காலம் லீக் போட்டிகளில் ஜோஸ் பட்லர் இருக்கமாட்டார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்ததாக டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் விளையாடுகிறது.

ஒருவார காலம் என்பது குறிப்பிட்டு சொல்ல இயலாது இன்னும் கூடுதலாகவும் எடுக்கலாம் என்றும் அணியின் மருத்துவர் தரப்பிலிருந்து கூறப்பட்டிருப்பதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய சிக்கலை தந்திருக்கிறது.

மேலும் இந்த காயம் குணமடைந்தாலும் மீண்டும் ஏற்படுவதற்கு அநேக வாய்ப்புகள் இருப்பதால், ஜோஸ் பட்லர் நாடு திரும்பலாம் என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.. ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிவுற்றவுடன் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது.  அதில் ஜோஸ் பட்லர் விளையாடுவதால், முன்னெச்சரிக்கையாக இங்கிலாந்து அணி நிர்வாகம் ஜோஸ் பட்லர்-ஐ இங்கிலாந்திற்கு அழைத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அந்த தரப்பினரால் கூறப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.