இங்கிலாந்தில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சென்னை ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணியும் பங்கேற்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் – ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பங்கேற்பு
இங்கிலாந்தில் உள்ள புரோ கோச் யார்க்ஷையர் அகாடமி சார்பில் 17 வயதுக்குட்பட்ட சர்வதேச ஜூனியர்ஸ் அகாடமி கிரிக்கெட் (20 ஓவர்) போட்டி நடத்தப்படுகிறது. வருகிற 9-ந் தேதி இந்தப் போட்டி தொடங்குகிறது.
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் பேர்டியில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளோடு சென்னையை சேர்ந்த அணியும் கலந்து கொள்கிறது. 16 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
அணியின் ஆலோசகராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு உள்ளார். வருகிற 5-ந்தேதி ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
போட்டியில் பங்கேற்கும் அணிகள்:
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவில் இருந்து HDS அகாடமி
கலிபோர்னியா கிரிக்கெட் அகாடமி, அமெரிக்கா
ப்ரோ கோச் யார்க்ஷயர் கிரிக்கெட் அகாடமி, இங்கிலாந்து
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாடு, இந்தியா
இந்த இடம் வட யார்க்ஷயரில் உள்ள Ampleforth கல்லூரி மற்றும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணி வளாகத்திலும் தங்கி இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் அனைத்து பயண ஏற்பாடுகள் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 5, 6 ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி முதல் டி20 ஜுனியர் சூபர் கிங்ஸ் ஆட்டத்தில் விளையாடும். வ்வொரு அணியும் இருமுறை ஒருவருக்கொருவர் விளையாடும். இறுதிப் போட்டி ஐம்பது போட்டியாக நடைபெறும்.