இங்கிலாந்து செமிபைனல் வரும்னு கணிச்சு சொன்னவன் எங்கடா… இங்கிலாந்து முன்னாள் கேப்டனை வச்சு செஞ்ச சேவாக் – ஆப்கனிஸ்தான் அணியிடம் தோல்விக்கு பின் ட்வீட்!

இங்கிலாந்து அணி குறைந்தபட்சம் செமி பைனலுக்கு வந்துவிடும் என்று கணித்திருந்த முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் வீரேந்திர சேவாக். ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வியை தழுவிய பிறகு இந்த கலகலப்பு X தளத்தில் நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் மோதிக்கொண்டன. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 49.5 ஓவர்களில் 284 ரன்கள் அடித்தது.

இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி வீரர்கள் வரிசையாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்து, அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளினர். ரன் ரேட் சரியான வேகத்தில் வந்து கொண்டிருந்தாலும் விக்கெட்டுகள் இல்லாமல் இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கடைசியில் 40 புள்ளி மூன்று ஓவர்களில் 215 ரன்கள் மட்டுமே அடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வியை இங்கிலாந்து அணி சந்தித்து இருக்கிறது.

தோல்விக்கு பின் இங்கிலாந்து அணியினர் கடும் விமர்சனங்களை பல்வேறு சமூக வலைதளங்களில் சந்தித்து வருகின்றனர். ஏனெனில் பலரும் இங்கிலாந்து நடப்பு சாம்பியன் அணியாக இருப்பதால் செமி பைனலுக்கு வந்து விடுவார்கள் என்று கணித்திருந்தனர். இந்த கணிப்பை இங்கிலாந்து அணி தற்போது பொய்யாக்கி விடுமோ என்கிற சந்தேகம் பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணி செமி பைனலுக்கு வந்துவிடும் என்று கணித்தவர்களில் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் ஒருவர். பல்வேறு குறும்புத்தனமான ட்வீட்டுகளை அவர் செய்வது வழக்கம். இந்திய முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர் மற்றும் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட சிலர் இவரிடம் வம்பு இழுப்பதும் வழக்கம்.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்த பிறகு சேவாக் ட்வீட் செய்திருந்தார். “1996 முதல் இங்கிலாந்து அணி ஒரு முறை தான் செமி பைனலுக்கு வந்திருக்கிறது 2023 ஆம் ஆண்டு அந்த செமி பைனல் சாத்தியம் இல்லை.” என ட்வீட் செய்தார்.

முன்னதாக மைக்கேல் வாகன், “இங்கிலாந்து அணி செமி பைனலுக்கு வருவது உறுதி.” என்று பதிவிட்டு இருந்ததற்கு சேவாக் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.