நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற்று கடைசி இரண்டு, மூன்று தொடர்களில் சிறப்பாக ஆடிய முகமது சமி தற்போது உலக கோப்பை செல்லும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் இன்று கருத்து தெரிவித்துள்ளார் அவர் கூறியதை பின்னர் காண்போம்.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் மே 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வருட உலகக் கோப்பையில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாடுகளும் தங்களது 15 பேர் கொண்ட உலககோப்பை அணியை அறிவித்து வருகின்றன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே 15 பேர் கொண்ட பட்டியலை அறிவித்து விட்டது. இந்நிலையில் நேற்று மாலை இந்திய அணியின் உலகக்கோப்பை செல்லும் 15 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்வுக் குழு.
இதில் துவக்க வீரர்களாக தவான் மற்றும் ரோஹித் சர்மா எவ்வித சந்தேகமுமின்றி இடம்பெறுகின்றனர். மூன்றாவது இடத்தில் கேப்டன் கோலி இருக்கிறார். நான்காவது இடத்திற்கான தீவிர தேடுதல் வேட்டையில் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுழல் பந்து வீச்சின் வரிசையில் இளம் ஜோடி யுசுவேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் உள்ளனர்.
இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியில் கடந்த இரண்டு மூன்று தொடர்களில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி அந்த முஹம்மது சமிக்கு ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டு, விக்கெட்டுகளையும் வீழ்த்தி, தற்போது உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள முகமது சமி இது குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது, ” நான் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கும்போதே தொடர்ந்து எனது முயற்சிகளை செய்து வந்தேன். இந்திய அணியில் பல மாதங்களுக்கு பிறகு இடம் கிடைத்து அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணி எனது நிலையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தேன். அது எனக்கு கை கொடுத்து உலக கோப்பையில் அணியிலும் இடம் பெறச் செய்துள்ளது. இதே நிலையுடன் தொடர்ந்து பயிற்சி செய்து இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவேன்” என்றார்.