அவர் அடிச்ச அடியில தோனியே நேரில் வந்த மாதிரி இருந்தது; மிரண்டுபோய் பேட்டி கொடுத்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் !

அவர் அடிச்ச அடியில தோனியே நேரில் வந்த மாதிரி இருந்தது; மிரண்டுபோய் பேட்டி கொடுத்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் !

தோனி தனது 39 ஆவது வயதில் இந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்துவிட்டார். கிட்டத்தட்ட 17 வருடங்கள் இந்திய அணிக்காக கடுமையாக உழைத்தவர். ஒரு கேப்டனாக விக்கெட் கீப்பராக அதிரடி பேட்ஸ்மேனாக இந்திய அணியில் பல வரலாறுகளை படைத்தவர்.

அவர் சென்ற பின்னர் அவருக்கான இடத்தை தற்போது வரை யாராலும் நிரப்ப முடியாது. ஒரு தனியாக விக்கெட் கீப்பர் தனியாக கேப்டன் ஒரு தனி அதிரடி பேட்ஸ்மேன் என்று மூன்று வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்நிலையில் தோனியின் இடத்தை நிரப்ப இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா வந்துவிட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்திருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக பேட்டிங் செய்துவருகிறார்.

ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை அதிரடியாக விளையாடி 90 ரன்களை குவித்த ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளிலும் பட்டையை கிளப்பினார். இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டிய இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா இதன்மூலம் 122 ரன்களை மிக எளிதாக செய்தது இந்திய அணி.

இந்த ஆட்டத்தை பார்த்த ஜஸ்டின் லாங்கர் தோனியை களத்தில் பார்த்தது போல் இருந்தது என்று மிரண்டுபோய் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் இந்த போட்டி நம்ப முடியாத வகையில் நடைபெற்று முடிந்துவிட்டது. ஹர்திக் பாண்டியா எப்படி ஆடுவார் என்று எங்கள் அனைவருக்கும் தெரியும்.

முன்பு இந்திய அணியில் தோனி பெஸ்ட் பினிஷேர் ஆக வலம் வந்து கொண்டிருந்தார். இப்போது ஹர்திக் பாண்டியா அந்த இடத்திற்கு வந்துவிட்டார். சொல்லப்போனால் அதிரடி உச்சத்திற்கே சென்றுவிட்டார். இந்த இந்திய அணியின் அனைத்து வீரர்களும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாகவே இருக்கின்றனர்.

ஒருவரை கூட நீங்கள் குறை சொல்ல முடியாது இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் ஒவ்வொரு அணியும் போராடித்தான் வெற்றி பெற்றது என்று தெரிவித்திருக்கிறார் ஜஸ்டின் லாங்கர்.

Prabhu Soundar:

This website uses cookies.