முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் முகமது கைப் ஓய்வு!!
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைப் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் அண்டர் 19 அணியில் இருந்து ஆடி வருபவர் கைப். மேலும், முதன் முதலாக இந்திய அணிக்காக அண்டர் 19 உலகக்கோப்பையை வென்ற கேப்டனும் முகமது கைப் தான். இவர்தான் இந்திய அணியில் பீலடிங் கண்ணோட்டத்தை மாற்றினார். தற்போது 37 வயதாகும் இவர் கடைசியாக 2006ல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் ஆடினார்.
அதன்பின்னர் உள்ளூர் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வந்தார். சென்ற வருடம் சத்தீஸ்கர் அணிக்காக ஆடியதே இவரது கடைசி முதல் தர போட்டியாகும்.
இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் ஆபி 32.84 சராசரியில் 624 ரன்களையம் 125 ஒருநாள் போட்டிகளில் 2753 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் இரண்டு வகையான போட்டிகளிலும் சேர்த்து 20 அரைசதம் மற்றும் 3 சதங்கள் அடித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடவெஸ்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டியில் இவர் சதம் அடித்து 322 ரன்னை சேஸ் செய்து வெற்றி பெற்றார். அந்த போட்டியில் தான் கங்குலி தனது சட்டையை கழற்றி சுழற்றி கெத்து காட்டினார்.
தனது ஓய்வு குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் கைப்.