முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கு கொரோனா வைரஸ்? – அதிர்ச்சி ரிப்போர்ட்

முன்னணி வேகப்பந்துவீச்சாளருக்கு கொரோனா வைரஸ்? – அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகபந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றதால் சக அணி வீரர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பியது. தொடர்ச்சியாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், நேற்றையதினம் ஒருநாள் தொடருக்காக சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியை துவங்கினர்.

அச்சமயம், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் தொண்டை பகுதியில் அசவுரியம் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அவருக்கு உடனடியாக கொரோனா இருக்குமென பரிசோதனைகள் நடைபெற்றது. முடிவுகள் வரும்வரை வீரர்களிடம் இருந்து தனிமை படுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் மருத்துவக்குழு அளித்த தகவலில், “கேன் தொண்டையில் வறட்சியாக இருப்பதாக தெரிவித்தார். இதனால், ஆஸ்திரேலிய அரசின் அறிவுரைப்படி, அவரை தனிமை படுத்தியுள்ளளோம். சுமார் 14 நாட்கள் வெளிநாடு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கொரோனா குறித்த பரிசோதனை அவருக்கு நடைபெற்று வருகிறது. வைரஸ் இருப்பது உறுதியானால், உரிய பாதுகாப்பு மற்றும் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்படும்.” என்றனர்.

மேலும், மற்ற வீரர்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவக்குழு தெரிவித்தது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் தற்போது முதல் ஒருநாள் போட்டியில் மோதி வருகின்றனர். இப்போட்டியை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக, முன்னெச்சரிக்கை ஏற்பாடாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் நடக்குமா? ரசிகர்கள் பார்வையிட அனுமதி கிடைக்குமா? என்பன குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் விண்ணப்பித்திருந்த விசாவை இந்திய அரசு தற்காலிகமாக நிராகரித்துள்ளது. ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி இல்லை என்ற பேச்சுக்களும் கிரிக்கெட் வட்டாரங்களில் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.