டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் சாதனை படைத்த அண்ணாத்த கேன் வில்லியம்சன் ! வெற்றிக்கு அருகில் நியூசிலாந்து அணி !
வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஹாமில்டன் மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து தொடக்க வீரர்கள் பலர் சரியாக விளையாடவில்லை. நியூசிலாந்து தொடக்க வீரர் வில் யங் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் டாம் லாதம் – கேப்டன் வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடியது. டாம் லாதம் 86 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதன் பின்னர் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 90 ரன்களுடனும் ராஸ் டைலர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது ஆட்டம் நேற்று துவங்கியது கேன் வில்லியம்சன் இதனைத் தொடர்ந்து 22 வது சதத்தை பூர்த்தி செய்தார். ராஸ் டைலர் 32 ரன்களிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தொடர்ந்து நிலையாக நின்று ஆடி இரட்டை சதம் விளாசினார். இது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும் 251 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன் ஆகும். இறுதியாக நியூசிலாந்து அணி 145 ஓவர்கள் பிடித்து 7 விக்கெட் இழப்பிற்கு 519 ரன்கள் குவித்து டிக்ளேர் கொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேமர் ரோச் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த கேன் வில்லியம்சன் அதிக இரட்டை சதம் அடித்த இரண்டாவது நியூசிலாந்து கேப்டன் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் பிரண்டன் மெக்கல்லம் ஐந்து இரட்டை சதங்கள் விளாசி இருக்கிறார். ஆனால் கேன் வில்லியம்சன் கேப்டனாக மூன்று இரட்டை சதங்கள் விளாசி அந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டார். வெகு சீக்கிரத்தில் அந்த சாதனையை முறியடித்து விடுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.