இந்த வீரரை யாரோடும் ஒப்பிட முடியாது கௌதம் காம்பீர் பேட்டி !!


இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 10 விக்கெட் இழப்பிற்க்கு 578 ரன்கள் குவித்து அசத்தினர்.குறிப்பாக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் அடித்து அசத்தினார்

நவீன காலத்தில் சிறந்த நான்கு வீரர்களான விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஜோ ரூட்டை மாற்ற யாருடனும் ஒப்பிட முடியாது அவர் அவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டினார்.


இதுபற்றி கௌதம் கம்பீர் கூறியதாவது ஜோ ரூட் கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 600க்கும் அதிகமான ரன்களை அடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் மற்ற நாடுகளில் சென்று சிறப்பாக செயல்படுவதில் வல்லவராக திகழ்கிறார்.


இந்த நாலு வீரர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை குறிப்பாக ஜோ ரூட் மற்றும் வில்லியம்சன் மிக மோசமான மற்றும் கடினமான சூழ்நிலையிலும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவதில் ஜாம்பவான்களாக திகழ்கின்றனர்.

இங்கிலாந்து மைதானத்தில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்படுவது என்பது அவ்வளவு எளிதான காரியம்,அங்கு உள்ள நிலைமையே வேறு, அதே போன்று ஒரு வீரர் மற்ற நாடுகளுக்கு சென்று சிறப்பாக செயல்படுவது என்பது எளிதான காரியமல்ல.குறிப்பாக இந்திய மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பேட்டிங் செய்வது எளிதான காரியமில்லை என்று கூறினார்.


இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இலங்கை அணியை வாஷ்-அவுட் செய்து வெற்றி பெற்றது, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 426 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அடுத்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி மிக சிறப்பாக செயல்பட்டு 578 ரன்களை குவித்து இருக்கிறது அதில் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்து அசத்தினார் இவர் கிட்டத்தட்ட 3 டெஸ்ட் போட்டிகளில் 600க்கும் அதிகமான ரன்களை அடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது, என்று கௌதம் காம்பீர் புகழ்ந்து கூறியுள்ளார்

Mohamed:

This website uses cookies.