நியுஸிலாந்து அணியின் சிறந்த வீரர், வீராங்கணைகளின் பட்டியல் அறிவிப்பு!

கடந்த ஆண்டுக்கான சிறந்த நியூசிலாந்து வீரராக ராஸ் டெய்லர் தேர்வாகியுள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த ஒருநாள் வீரராக கேப்டன் கேன் வில்லியம்சன் நேற்று தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, நியூசிலாந்தின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக சுசி பேட்ஸ் தேர்வானார். இலங்கை, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர், சிறந்த டி20 வீரராகவும் சோபி டிவைன் சிறந்த டி20 வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான சிறந்த நியூசிலாந்து வீரராக ராஸ் டெய்லர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ரிச்சர்ட் ஹாட்லி விருதை மூன்றாவது முறையாக வென்றுள்ளார். கிம் காட்டன், சிறந்த நடுவராகத் தேர்வாகியுள்ளார்.

New Zealand’s Ross Taylor in action during the ICC World Cup, Semi Final at Emirates Old Trafford, Manchester. (Photo by Martin Rickett/PA Images via Getty Images)

அதேபோல டிம் செளதி, சிறந்த டெஸ்ட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 8 டெஸ்டுகளில் 40 விக்கெட்டுகளை எடுத்து இந்த விருதை அவர் வென்றுள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான நியூஸிலாந்தின் சிறந்த ஒருநாள் வீரராக கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல, நியூஸிலாந்தின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக சுசி பேட்ஸ் தேர்வாகியுள்ளார்.

2019 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடினார் வில்லியம்சன். 578 ரன்கள் எடுத்து போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

New Zealand captain Kane Williamson created a Cricket World Cup record during the final of the 2019 ICC Men’s Cricket World Cup. The right-handed batsman became the most run-scorer as a captain in a single CWC edition.

மகளிர் கிரிக்கெட்டில் கடந்த ஒரு வருடத்தில் நியூஸிலாந்து அணி 3 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளது. அவற்றில் இரு அரை சதங்களை எடுத்த பேட்ஸ், சிறந்த ஒருநாள் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர், சிறந்த டி20 வீரராகவும் சோபி டிவைன் சிறந்த டி20 வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சிறந்த டெஸ்ட் வீரர் உள்ளிட்ட முழுப் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.