பந்து வீச்சாளர்களால் வெற்றி பெற்றோம் : ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி இழந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், டெல்லி டேர்டெவில்ஸ் – ஐதராபாத் அணிகள் நேற்று மோதின. ஐதராபாத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணியில் அதிகப்பட்சமாக பிருத்வி ஷா 36 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 44 ரன்களும் கடைசி கட்டத்தில் தமிழக வீரர் விஜய சங்கர் 13 பந்துகளில் 23 எடுத்தனர். ஐதராபாத் சார்பில் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கவுல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

பின்னா் களம் இறங்கிய ஐதராபாத் அணியின் ஷிகர் தவானும், அலெக்ஸ் ஹேல்சும் அதிரடியாக ஆடினர். ஹேல்ஸ் 31 பந்தில் 45 ரன்களும் தவான் 30 பந்தில் 33 ரன்களும் எடுத்து அமித் மிஸ்ரா சுழலில் அவுட் ஆயினர். அடுத்து அந்த கேப்டன் வில்லியம்சனும் (32) யூசுப் பதானும் (27) அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். ஐதராபாத் அணி 164 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ஏழாவது தோல்வியை சந்தித்துள்ள டெல்லி அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. 

ஐதராபாத்தில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி-டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டெல்லி அணி தனக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவா்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சோ்த்தது. இதில் டெல்லி அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 65(36) ரன்களும் ,பின்னா் கேப்டன்  ஷ்ரேயாஸ் அய்யர் 44(36) ரன்களும்  எடுத்திருந்தனா்.  ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னா் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முணைப்புடன் களம் கண்டது ஐதராபாத் அணி.

ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டகாரா்களான ஷிகர் தவானும், அலெக்ஸ் ஹேல்சும் முதலில் களம் கண்டனா்.  இருவரும் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தனா். பின்னா் இருவரும் டெல்லி அணியின் பந்துகளை பவுண்டாியாக மாற்றினா். இதன் பின்னா் சிறப்பாக விளையாடி வந்த அலெக்ஸ் 45 (31 பந்துகள்) 9வது ஓவாின் முடிவில் மிஸ்ராவின் சுழலில் சிக்கி போல்டாகினாா். அவருக்கு  ஜோடியாக இடது கை ஆட்டகாரா் தவானும் 33( 30 பந்துகள்) மிஸ்ரா பந்தில் போல்டாகி ரசிகா்களை ஏமாற்றினாா்.
வெற்றி கனியை பறிக்க டெல்லி அணியின் பந்து வீச்சாளா்கள் பந்துகளை வேகமாகவும் தந்திரமாகவும் வீசினா். இவா்களுக்கு பின்னா் களமிறங்கி கேப்டன் வில்லியம்சனும் பாண்டேவும் அணியின் ரன்களை குறையாமல் இருக்க நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். பின்னா் கடைசி ஓவா்களில் டெல்லி அணியின் பந்து வீச்சாளா்களை திணறடித்தனா். பின்னா் பிளன்கெட் பந்தில் பாண்டே 21 (17பந்துகள்) ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இவரை தொடா்ந்து அதிரடி மன்னன் யூசப் பதான்  களத்தில் பிரேவேசித்து கடைசி ஓவா்களில்  ரசிகா்களுக்கு வாணவேடிக்கை காட்டினாா். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 164 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணி சார்பில்  மிஸ்ரா 2 விக்கெட்டும்,  லியாம் பிளன்கெட் 1 விக்கெட்டும் மட்டும் வீழ்த்தி இருந்தனா்.

Editor:

This website uses cookies.