அடித்து நொறுக்கும் நியூசிலாந்து தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான்
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது டி20 போட்டியில் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியும் ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது இதனை தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் 87 ஓவர்கள் வீசி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் அடித்து இருந்தது நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 94 வந்தாலும் என்றே நிக்கோலஸ் 47 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்
தொடா்ந்து நியூஸிலாந்து பேட்டிங் வரிசையில் மிட்செல் சேன்ட்னா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 19 ரன்களுக்கு நடையைக் கட்ட, கைல் ஜேமிசன் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 32 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். அடுத்து வந்த டிம் சௌதி டக் அவுட்டாக, வாட்லிங் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா்.
கடைசி விக்கெட்டாக நீல் வாக்னா் 2 பவுண்டரிகள் உள்பட 19 ரன்களுக்கு அவுட்டானாா். டிரென்ட் போல்ட் 8 ரன்களுடன் களத்தில் இருந்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி 4, யாசிா் ஷா 3, முகமது அப்பாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், நசீம் ஷா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 20 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 10 ரன்களுக்கு வீழ, அபித் அலி 19, முகமது அப்பாஸ் ரன்கள் இன்றி களத்தில் உள்ளனா். நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் ஒரு விக்கெட் எடுத்திருந்தாா்.