வீடியோ; தன்னடக்கத்தில் தோனியை மிஞ்சிய கேன் வில்லியம்சன் !!

வீடியோ; தன்னடக்கத்தில் தோனியை மிஞ்சிய கேன் வில்லியம்சன்

உலகக்கோப்பையை நூழிலையில் தவறவிட்ட பொழுதும் கூலாக இருந்த கேன் வில்லியம்சனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பெரியளவில் பேட்டிங் சிறப்பாக இல்லாதபோதிலும் கேன் வில்லியம்சனின் சிறப்பான கேப்டன்சியாலும் அபாரமான பவுலிங்காலும் இறுதி போட்டி வரை வந்து, இறுதி போட்டியிலும் இங்கிலாந்திற்கு செம நெருக்கடி கொடுத்தது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணியை தனி ஒருவனாக தனது தோள்களில் சுமந்துகொண்டு இறுதி போட்டி வரை அழைத்துவந்து, கோப்பையை வெல்ல தகுதியான அணி என்று அனைவரும் பாராட்டும்படியாகவும் நியூசிலாந்து கோப்பையை வெல்லாததை நினைத்து வருந்தும்படியான ரசிகர்களை சம்பாதிப்பதற்கும் வில்லியம்சன் ஒருவரே காரணம்.

கப்டில், நிகோல்ஸ், லேதம், என எந்த வகையிலும் பேட்டிங்கில் சரியான சப்போர்ட் கிடைக்காமல் டெய்லருடன் இணைந்து தனி ஒருவனாக அழைத்து வந்தார் வில்லியம்சன். உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட 300 ரன்களை அடிக்காவிட்டாலும் கூட, அடித்த குறைந்த ஸ்கோரைக்கூட, அணியையும் பவுலர்களையும் சிறப்பாக வழிநடத்தி டிஃபெண்ட் செய்ய பக்கபலமாக இருந்தவர் வில்லியம்சன் தான்.

உலக கோப்பை இறுதி போட்டியில் கடுமையாக போராடி வெற்றிக்கு அருகில் சென்ற நியூசிலாந்து அணி சில துரதிர்ஷ்டமான சம்பவங்களால் கோப்பையை இழக்க நேரிட்டது. 49வது ஓவரில் ஸ்டோக்ஸின் கேட்ச்சை பிடித்த போல்ட் பவுண்டரி லைனை மிதித்தது, கடைசி ஓவரில் ஓவர் த்ரோவால் கிடைத்த 4 ரன்கள் என அனைத்துமே நியூசிலாந்துக்கு எதிராக அமைந்தது. போட்டி டிரா ஆன நிலையில், சூப்பர் ஓவரும் டிரா ஆனதால், போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணிதான் வெற்றி என்ற ஐசிசி விதிப்படி இங்கிலாந்து கோப்பையை வென்றது.

அவ்வளவு சோகத்திலும் போட்டிக்கு பின்னர் பேசும்போது, சிறு சிறு புன்னகையை உதிர்த்தார் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். துரதிர்ஷ்டத்தால் கோப்பையை இழந்த ஒரு அணியின் கேப்டனுக்கு எவ்வளவு மனவருத்தம் இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் அப்படியான சூழலிலும் அந்த வருத்தத்தை பெரிதாக காட்டாமல் புன்னகையை உதிர்த்துவிட்டுத்தான் சென்றார் வில்லியம்சன். அதிலும் குறிப்பாக தனக்கு தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்ட உடன் கேன் வில்லியம்சன் கொடுத்த ரியாக்சன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Mohamed:

This website uses cookies.