2018-19ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பையில் ஆந்திரபிரதேஷ அணிக்காக ஆடுகிறார் கரண் சர்மா.
உத்திரபிரதேசத்தில் பிறந்த கரண் சர்மா கடந்த சீசனில் விதர்பா அணிக்காக ஆடிய கரண் சர்மா சிரப்பாக பந்து வீசினார். நான்கு போட்டிகளில் ஆடிய சர்மா 14 விக்கெட்டுகளை பேசினார். இவரது சராசரி 33.14 மற்றும் எகானமி 3.24 ஆகும்.
இவர் பெட்டிங்கிலும் சிறப்பாக ஆடினார். கீழ் ஆர்டரில் ஆடும் கரண் சர்மா 4 போட்டிகளில் 106 ரன்கள் அடித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 52 ரன்கள் அடித்தார். கடந்த முறை இவரை ஆடிய விதர்பா அணி முதன்முறையாக ரஞ்சிக்கோப்பையை வென்றது.
இதற்கு முன்பு ரயில்வே அணிக்காக 65 முதல்தர போட்டிகளை ஆடியுள்ள கரண் சர்மா 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சிறப்பான பந்துவீச்சு 8/97. மேலும், 1973 ரன்களும், 13 அரை ஸஹ்டங்களும் விளாசியுள்ளார்.
கரண் ஷர்மாவை வாழ்த்திய விதர்பா அணி
இந்த வருடம் ஆந்திரா அணிக்காக கரண் சர்மா மட்டுமே எடுக்கப்பட்டுள்ளார். வேறு எவரையும் ஆந்திரா அணி எடுக்கவில்லை. மேலும், விதர்பா அணி தனது அணிக்காக வாசிம் ஜாபர் மற்றும் கணேஷ் சதிஷ் இருவரையும் தக்க வைத்துள்ளது.
கரண் சர்மா இந்திய அணிக்காக ஒரு டி20, ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளை ஆடியுள்ளார். ஆனால், தனக்கென நிரந்தரமான ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
“கடந்த சீசனில் அவருக்கு அதிக போட்டிகள் வழங்கவில்லை, அதனால் தாமாக முன்வந்து தன்னை விடுவிக்குமாறு சர்மா கூறினார். அவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாங்களும் அவரை விடுவித்து விட்டோம். அவரின் வருங்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்” என விதர்பா அணியின் தலைவர் பிரஷாந்த் வைத்யா கூறினார்.