கிரிக்கெட்டில் மிகவும் மட்டமான சாதனை படைத்த இலங்கை வீரர் !!

கிரிக்கெட்டில் மிகவும் மட்டமான சாதனை படைத்த இலங்கை வீரர்

டி-20 கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சாதனை படைத்துள்ளார் இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஞ்சிதா.

இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி அடிலெய்டில் இன்று நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பின்ச் 36 பந்துகளில் 64 ரன்களும் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ரன்களும் டேவிட் வார்னர் 100 ரன்களும் எடுத்தனர். பின்னர், களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில், இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஞ்சிதா, 4 ஓவர்கள் வீசி 75 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி-20 வரலாற்றில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதற்கு முன், செஸ் குடியரசுக்கு எதிரான போட்டியில் துருக்கியின் துனஹன் துரன் 70 ரன்கள் விட்டுக் கொடுத்ததிருந்ததே மோசமான சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் கசுன் ரஞ்சிதா.

Mohamed:

This website uses cookies.