சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் கேதார் ஜாதவிற்கு காலில் அடிபட்டுள்ளதால் நடக்க முடியாமல், போட்டியின் நடுவிலேயே வெளியே சென்றார். இதனால் பெரிய ஸ்கோர் அடிக்கும் போது இவர் வெளியே போனது சென்னை ரசிகர்களின் நம்பிக்கையை சிதறடித்து.
பிறகு வந்த டுவைன் பிராவோ எதிரணி பந்துவீச்சை நாலா புறமும் விளாசி 30 பந்துகளில் 68 ரன்கள் விளாசி சென்னை அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். 19வது ஓவரில் பிராவோவும் அவுட் ஆக, சென்னை ரசிகர்களுக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை பட, கேதார் ஜாதவ் மீண்டும் பேட்டிங் விளையாட வந்தார். ஓட முடியாத காரணத்தினால் அம்சமாக வரும் பந்தை பவுண்டரி கோட்டுக்கு அனுப்ப காத்திருந்தார் ஜாதவ். முதல் மூன்று பந்துகளை ஸ்டோக் வைத்து, பந்தை எப்படி வீசுகிறார் என கணக்கு போட்ட ஜாதவ், 4வது பந்தில் சிக்சரும் 5வது பந்தில் பவுண்டரியும் அடித்து சென்னை அணிக்கு வெற்றியை வாங்கி தந்தார்.
சென்னை அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்த டுவைன் பிராவோ ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். அதன் பிறகு கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த கேதார் ஜாதவ் டுவைன் பிரவோவை புகழ்ந்து தள்ளினார்.
மேலும், நான் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற உதவி செய்ததை நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது. ஆனால், இது கனவு போன்று தெரிகிறது. நான் மனதளவில் சந்தோசமாக இருந்தாலும், உடலளவில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம், இரண்டு வாரம் ஏன் ஒரு மாதத்திற்கு கூட என்னால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போகலாம் என கேதார் ஜாதவ் தெரிவித்தார்.