உலககோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் இந்திய ஆல்ரவுண்டர் ஆடுவது சந்தேகம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

உலககோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் இந்தியா ஆல்ரவுண்டர் ஆடுவது சந்தேகம் ரசிகர்கள் அதிர்ச்சி

உலக கோப்பை தொடர் வரும் மே 30 தேதி முதல் துவங்க உள்ளது தற்போது ஐபிஎல் தொடரின்போது காயமடைந்துள்ள இந்திய ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் பயிற்சி ஆட்டத்திலும், முதல் சில லீக் ஆட்டங்களிலும் கலந்துகொள்வது சந்தேகமாகி உள்ளது. இந்த காயம் முற்றிலுமாக சரியாகிவிட்டால் அவர் தொடர்ந்து இந்தியாவிற்காக ஆடுவார் இல்லை எனில் உலக கோப்பை தொடரில் அவர் புதிதாக வீரர் சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் திறனை ஒப்பிட முடியாது என முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் அந்த அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முக்கிய பங்கு வகித்திருந்தார். டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா அதில் இருந்து மீண்டு வந்த நிலையிலேயே ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தார்.

இடை நீக்க காலத்தில் பயிற்சியில் அதீத கவனம் செலுத்தியதன் மூலம் தனது பேட்டிங் திறனை ஹர்திக் பாண்டியா கூடுதல் மெருகேற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் 402 ரன்களை, 191.42 ஸ்டிரைக் ரேட்டுடன் விளாசி அசத்தியிருந்தார். அதிலும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்துகளில் 91 ரன்களை விளாசி மிரளச் செய்திருந்தார்.

சிறந்த பார்மில் உள்ள ஹர்திக் பாண்டியா, இம்மாத இறுதியில் தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடரில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் திறனை இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிட முடியாது என முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு சேவக் அளித்துள்ள பேட்டியில், “பேட்டிங், பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவின் திறனுடன் அணியில் உள்ள எவருமே நெருக்கமாக இல்லை. அவரது திறனுக்கு நெருக்கமாகவும், முப்பரிமான திறன்களையும் யாரேனும் கொண்டிருந்தால் பிசிசிஐ அவரை தேர்வு செய்திருக்கும். அப்படியொரு திறன் வாய்ந்த வீரர் கிடைத்திருந்தால் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குள் வந்திருக்க முடியாது” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.