கேதார் ஜாதவிற்கு காயம் ! மாற்று வீரர் அறிவிப்பு !

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தபின், 3 ஒரு நாள் போட்டிகளில் அடுத்து விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவுல், சாஹேல், அக்‌ஷர் படேல், ஹர்திக், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நாளை தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டியின் இந்த பயிற்சி செஷனில் கேடர் ஜாதவ் பங்குபெறவில்லை. ஏனெனில், காயம் காரணமாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். முதல் ஒருநாள் போட்டி நாளை துவங்கவுள்ளதால், அவர் இன்று மாலைக்குள் காயத்தில் இருந்து மீண்டு வந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அவரால் அதிலிருந்து தற்போது மீண்டு வர இயலவில்லை. இதன் காரணமாக அவர் இலங்கை ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு மாற்றாக 17 வயதான இளம் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு ஆள் ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் தேர்வு செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் வெகு காலம் நிலைக்கலாம்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது இந்திய அணிக்கு வர தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் யோ-யோ டெஸ்டில் பெய்ல் ஆனதால், அவரால் இடம் பிடிக்க முடியவில்லை. நம்பிக்கையை தளரவிடாத வாஷிங்டன் சுந்தர் பயிற்சி எடுத்து யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றார்.

இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், அற்புதமாக செயல்பட்டார். 11 விக்கெட்டுகள் வீழ்த்திய வாஷிஙடன் சுந்தர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். துலீப் டிராபியில் சிறப்பாக செயல்பட வாஷிங்டன் சுந்தர், ரஞ்சி டிராபியில் 315 ரன் அடித்து, 12 விக்கெட்டும் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 159 ஆகும்.

Editor:

This website uses cookies.