என்னை சீண்டாதீர்கள்: கலாய்ப்பவர்களுக்கு அசோக் டிண்டா பதிலடி!
என்னுடைய பவுலிங் புள்ளி விபரம் தெரியாமல் என்னை கிண்டலடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் என அசோக் டிண்டா படு கோபத்தில் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 12வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை நடைப்பெறுகிறது.
இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி இந்த தொடரில் பெங்களூரு அணிக்கு தலைமை ஏற்றுள்ளார். தொடரில் பெங்களூரு விளையாடிய முதல் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து தள்ளாடியது தற்போது வரிசையாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற துடித்துக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் பெங்களூருவின் தோல்விக்கு பெரும்பாலும் அந்த அணியில் உள்ள பவுலர்கள் வாரி வழங்கும் ரன்களால் தான் என டுவிட்டரில் கலாய்க்கப்பட்டு வந்தனர். கூடவே அசோக் டிண்டா கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெறுங்கள் என கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆர்.சி.பி-யின் ட்விட்டர் பக்கத்தில், உமேஷ் யாதவ் படத்தைப் போட்டு டிண்டாவை கலாய்த்திருந்தனர். இந்த ட்வீட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர்.சி.பி ட்விட்டர் பக்கம் விளக்கம் ஒன்றையும் அளித்தது. அதாவது
உங்களில் பலர் குறிப்பிட்டதுபோன்று கடந்த ட்வீட் மோசமான ஒன்றுதான். எனினும், உமேஷ் யாதவை தொடர்ந்து கலாய்த்துவந்தவர்களின் சவாலை ஏற்று, சிறப்பாகப் பந்துவீசினார். கடைசி இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகள் எடுத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தன்னை கலாய்த்தவர்களுக்கு டிண்டா பதிலடிகொடுத்திருக்கிறார். ஃபேஸ்புக்கில், தனது பந்துவீச்சு தொடர்பான புள்ளி விவரங்களை அடுக்கிய அவர், என்னை வெறுப்பவர்களுக்கு சரியான புள்ளிவிவரங்களை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். என்னைப் பற்றி உண்மைக்கு எதிரான கருத்துகளை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.
அசோக் டிண்டா, முன்னதாக பெங்களூரு அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடக்கத்தில் கொல்கத்தா அணியில் விளையாடிய அவர், பின்னர் புனே, ஆர்.சி.பி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.வ்