வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான ஒருநாள் போட்டியை நடத்தப் போகிறது திருவனந்தபுரம் க்ரீன் பீல்டு மைதானம் – பிசிசிஐ பச்சைக்கொடி
தென்னிந்திய தமிழகத்தில்(சேர தமிழகம்) இன்னொரு கிரிக்கெட் மைதானம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னரே அங்கீகாரம் பெற்றாலும் தற்போது வரை ஒரு சர்வதேச போட்டி கூட நடத்த முடியவில்லை.
முன்னதாக இந்தியா- இலங்கை தொடரில் ஒரு போட்டி நடத்த இந்த மைதானத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு, பின்னர் கடைசி நேர அட்டவனையில் மழையின் காரணமாக போட்டி நாக்பூர் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அதனின்னர் நியுஸிலாந்து அணிக்கெதிரான ஒரே ஒரு போட்டி மட்டும் இந்த மைதானத்தில் நடந்தது.
தற்ப்போது இந்த மைதானத்தில் மீண்டும் சர்வதேச போட்டிகாண வாய்ப்பு வந்துள்ளது. இன்னும் சிலமாதங்கள் கழித்து இந்திய வரும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிதொடரில் ஆடுகிறது. இதில் நவம்பர் 1ஆம் தேதி நடக்கும் போட்டியை நடத்த திருவனந்தபுரம் கரியாவட்டம் க்ரீன்பீல்டு மைதானத்திற்கு பச்சை கொடி காட்டியுள்ளது பிசிசிஐ.
கால்பந்து வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரிடமிருந்து வந்த எதிர்ப்புக்களை தொடர்ந்து, தங்கள் திட்டத்தை கைவிட கே.சி.ஏ. முடிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபர் முதல் நவம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று T-20 சர்வதேச போட்டிகளில் விளையாடும். இது அரங்கில் நடைபெறும் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.