சிக்ஸரால் வந்த வினை; தனது கார் கன்னாடியை தானே உடைத்த அயர்லாந்து வீரர் !!

சிக்ஸரால் வந்த வினை; தனது கார் கன்னாடியை தானே உடைத்த அயர்லாந்து வீரர்

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன அயர்லாந்து அணியின் கெவின் ஓ பிரைன் அடித்த சிக்ஸர் ஒன்றில் அவரது கார் கன்னாடியே உடைந்துள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த கெவின் ஓ பிரயன் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்தவர். அயர்லாந்து கிரிக்கெட் அணி வீரர்களில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிந்த ஒரே பெயர் கெவின் ஓ பிரயனாக மட்டும் தான் இருப்பார்.

 

 

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 50 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த கெவின் ஓ பிரையன், தற்பொழுது சர்வதேச போட்டிகள் எதுவும் அவ்வளவாக இல்லாததால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அயர்லாந்தில் நேற்று நடைபெற்ற இன்டர் புரொவின்சியல் டி20 டிராபி தொடரில் நார்த் – வெஸ்ட் வாரியர் அணிக்கு எதிரான போட்டியில் லெய்ன்ஸ்டர் லைட்னிங் அணிக்காக 37 பந்துகளில் எட்டு சிக்ஸ் உட்பட 82 ரன்களை விளாசியிருந்தார் கெவின் ஓ பிரையன்.

அதில் அவர் அடித்து ஒரு சிக்ஸ் டப்லினில் அமைந்துள்ள மைதானத்தின் கூரையை கடந்து பறந்து சென்று கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொயோட்டா காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளது. போட்டி முடிந்த பிறகு தான் சிக்ஸர் அடித்த அதே கெவின் ஓ பிரையன் தான் அந்த உரிமையாளர் என்ற தகவலும் தெரியவந்து.

மாஸ் சிக்ஸர் அடிச்சதுக்கு சந்தோசப்படுறதா இல்ல தனது கார் கன்னாடியை தானே உடைத்ததை கவலைப்படுவதா என்று தன்னை தானே நொந்து கொண்ட கெவின் ஓ பிரையன், தற்பொழுது தனது காரை டோயோட்டோ சர்வீஸ் செண்டரில் வேலைக்கு விட்டுள்ளாராம்.

Mohamed:

This website uses cookies.