ஆர்சிபியின் வெற்றிக்கு காரணம் என்ன ? இந்த ஒன்னு தாங்க ! கெவின் பீட்டர்சன் கண்டுபிடித்த உண்மை
2008முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்தாண்டு நடைபெறும் 14வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று இந்த சீசனில் இதுவரை 18லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசனில் சிறந்த பார்மில் இருக்கிறது. இதுவரை பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த நான்கு போட்டிகளிலும் பெங்களூர் வெற்றி இருக்கிறது. இதன்மூலம் புள்ளி பட்டியலில் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே முதல் இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் மற்றும் +1.009 நெட் ரன் ரேட் பெற்றிருக்கிறது.
மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், ஹைதராபாத்துக்கு எதிராக 6 விக்கெட்டிலும், கொல்கத்தாவுக்கு எதிராக 38 ரன்களிலும், ராஜஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆர்சிபி அணியின் இந்த தொடர் வெற்றிக்கு ஆர்சிபி பேட்ஸ்மன்கள் படிக்கல், கோலி, மேக்ஸ்வெல், ஏபிடி வில்லியரஸ் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். அதேபோல் பவுலிங்கில் ஹர்ஷல் பட்டேல், சஹால் மற்றும் சிராஜ் சிறப்பாக செய்லபட்டு இருக்கிறார்கள். கடந்த சீசனை விட இந்த சீசனில் ஆர்சாபி அணியின் பந்துவீச்சாளர்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “ஆர்சிபி அணியில் இந்த முறை பவுலிங்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதே போல் பேட்டிங்கிலும் மேக்ஸ்வெல்லை தேர்வு செய்து மிகப் பெரிய மாற்றத்தை செய்து இருக்கிறது. இதெல்லாம் தான் அந்த அணிக்கு முக்கிய பக்கபலமாக இருக்கிறது.
முகமது சிராஜ் மற்றும் கெயில் ஜேமிசனின் பவுலிங் ஜோடி சிறப்பாக அமைத்து விட்டது. அதே போல் சஹால் 3 அல்லது 4வது ஓவரில் வந்து விக்கெட்களை வீழ்த்திவிடுகிறார். இந்த சீசனில் விராட் கோலிக்கு பவுலிங்கில் பிரச்சினை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் இன்னும் விளையாடவில்லை. இவர்களும் விளையாடு போது ஆர்சிபிக்கு இன்னும் பலமாக இருக்கும்” என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.