ஐபிஎல் நடக்குது.. இப்போ சர்வதேச போட்டிகள் வச்சா யாரு பாப்பாங்க? – கிரிக்கெட் வாரியங்களை எச்சரித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

ஐபிஎல் போட்டிகள் நடக்கையில், சர்வதேச போட்டிகள் நடத்துவதை தவிர்க்கவேண்டும் என கிரிக்கெட் வாரியங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்.

ஐபிஎல் தொடரின் 14 வது சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகளின் அட்டவணைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூரு இருபெரும் அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி பிரம்மாண்டமான மைதானமாக பார்க்கப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தப்பட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் அனைத்து தரப்பு நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் நிகழ்வாகும். பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுவர். மிகப்பெரும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐபிஎல் தொடரானது பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், “ஐபிஎல் எனும் மிகப்பெரிய நிகழ்வு நடக்கையில், கிரிக்கெட் வாரியங்கள் இதனை உணர வேணும். இந்த காலகட்டத்தில் சர்வதேச போட்டிகளை திட்டமிடக்கூடாது. மிகவும் சிம்பிள்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். 

இதன்மூலம் அவர் தெரிவிக்க வருவது என்னவென்றால், இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவே பெரும்பாலும் நடத்தப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சூழலில் அனைத்து ரசிகர்களின் கவனம் அதிலேயே இருக்கும். இந்த நேரத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெற்றால், எதிர்பார்க்கும் அளவில் கவனத்தை பெற இயலாது என்பதையே அவர் கிரிக்கெட் வாரியங்களும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐபிஎல் தொடர் நடைபெற இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே இருப்பதால், வீரர்கள் ஏற்கனவே தங்களை தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இன்னும் சில தினங்களில் இயல்பான பயிற்சிக்கும் திரும்ப உள்ளனர். ஏனைய வீரர்கள் அந்த மைதானங்களுக்கு ஏற்கனவே வந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் தொடரில் பல முக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்க முடியாமல் தங்களது ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் அடுத்து வரவிருக்கும் தொடருக்கு குறைந்த காலமே இருப்பதால் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என இந்த விலகலுக்கான காரணமாக குறிப்பிட்டிருக்கின்றனர்.

Mohamed:

This website uses cookies.