ஒரு புறாவிற்க்கு வந்த அக்கப்போரா? கெவின் பீட்டர்சன் கைது!!
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஸ்விசர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது , அவர் விமான நிலையத்தில் விளையாட்டாக தனது ‘கோல்ப்’ விளையாடு திறமைகளை காட்டியிருக்கிறார் போலும்.
இதனைக் காரணம் காட்டி கெவின் பீட்டர்சனை விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரிக்கும் அறையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதவது.
“ஜெனீவவின் விமான நிலைஅய விசாரிக்கும் அறையில் வைத்துவிட்டார்கள். இது விளையாட்டு அல்ல, கிட்டத்தட கைது செய்துவிட்டார்கள். ஒரு விளையாட்டுக்காக செய்த கோல்ப் வித்தைக்காக அடைகப்பட்டேன்”
என ஒரு புறாவிற்க்கு வந்த அக்கப்போற என்றபடி பதிவிட்டுள்ளார் கெவின்.
சர்ச்சைகளில் சிக்குவது கெவினுக்கு இது புதிதல்ல அடிக்கடி இது போன்ற தேவையில்லாத விசயங்களில் சிக்குவது தான் நம்ம ஆளுக்கு முழு நேர வேளையே.
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் கெவின் பீட்டர்சன். 37 வயதாகும் இவர், இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடைசியாக சிட்னியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியி்ல் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார்.
அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க முடியாமல் உள்ளார்.
சமீப காலமாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த கெவின் பீட்டர்சன், தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். அப்போது 35 பந்தில் ஐந்து சிக்சருடன் 52 ரன்கள் விளாசினார்.
இதனால் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட அவருக்கு ஆசை வந்துவிட்டது.
இதுகுறித்து பீட்டர்சன் கூறுகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தென்ஆப்பிரிக்காவில் ஏராளமான போட்டிகளில் விளையாட இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பீட்டர்சன் கூறுகையில்
‘‘தென்ஆப்பிரிக்காவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான போட்டிகளில் விளையாட இருக்கிறேன். அதை நீங்கள் பார்ப்பீர்கள். நான் பேட்டிங்கை விரும்புகிறேன்.
நான் பேட்டிங் கலையை நேசிக்கும்வரை பேட்டிங் செய்வேன். தற்போதைய நிலையில் நான் பேட்டிங் செய்து வருகிறேன்.
ஆனால் தற்போது எனக்கு 37 வயதாகிவிட்டது. காலில் வலி இருப்பதால் பீல்டிங் செய்யவில்லை.
அடுத்த இரண்டு வருடங்கள் நான் எங்கே இருக்கப்போகிறேன் என்று யாருக்குத் தெரியும்?. நான் சிறப்பாக பேட்டிங் செய்தால்,
நான் எங்கே இருப்பேன் என்று பார்ப்போம். நான் மிகவும் சந்தோஷமான இடத்தில் இருக்கிறேன்’’ என்றார்.
கெவின் பீட்டர்சன் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். பின்னர் இங்கிலாந்து குடியுரிமை பெற்று இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.