பல முக்கியமான வீரர்களே இல்லை… பதிரானாவிற்கு அணியில் இடம்; ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு !!

பல முக்கியமான வீரர்களே இல்லை… பதிரானாவிற்கு அணியில் இடம்; ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தனது போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

கடந்த ஆசிய கோப்பை டி.20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி செப்டம்பர் மாதம் 31ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணியை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் ஹசரங்கா, சமீரா, குசால் பெரேரா மற்றும் பெர்னாண்டோ போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. இலங்கை ப்ரீமியர் லீக் தொடரின் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஹசரங்கா ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதே போல் மற்ற முக்கிய வீரர்களும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் அஸ்லன்கா, டி சில்வா, நிஷான்கா போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பதிரானா மற்றும் தீக்‌ஷன்னா ஆகியோரும் ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி;

தசுன் ஷானகா, பதும் நிஷான்கா, திமுத் கருணாரத்னே, குஷால் ஜனித் பெரேரா, குஷால் மெண்டீஸ், சாரித் அஸ்லன்கா, டி சில்வா, சதீரா சமரவிக்ரமே, மதீஷா தீக்‌ஷன்னா, துனித் வெல்லால்கே, மத்தீஷா பதிரானா, கசுன் ரஜிதா, துசன் ஹெமாந்தா, பினுரா பெர்னாண்டோ, பிரமோத் மடுசான்.

Mohamed:

This website uses cookies.