ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இவர்களில் சிறந்த கேப்டன் யார்? இளம் பந்துவீச்சாளர் கலில் அகமது ஓபன் டாக்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இவர்களில் சிறந்த கேப்டன் யார்? இளம் பந்துவீச்சாளர் கலில் அகமது ஓபன் டாக்

இந்திய அணிக்காக 11 ஒருநாள் போட்டிகளிலும் 14 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளவர் கலில் அகமது. இவருக்கு தற்போது 22 வயது ஆகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஆசிய கோப்பை, இந்திய அணிக்காக ஒரு வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானார். இந்த போட்டியில் ரோகித் சர்மாவின் தலைமையில் தான் இவர் விளையாடினார்.

அதன் பின்னர் தோனி மீண்டும் அணிக்கு கேப்டனாக பின்னர் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அணிக்கு வெளியே இருந்தார்கள். அப்போது காலில் அகமது தோனியின் தலைமையில் 10 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தான் முதன்முதலில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்த போட்டியில் விராட் கோலியின் தலைமையில் விளையாடினார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட போகிறார். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரது தலைமையிலும் விளையாடியுள்ள கலீல் அஹமது இருவரில் யார் மிகச் சிறந்த கேப்டன் என்பது பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்….

ரோஹித் சர்மாவும் விராட் கோலி ஆகியோர் வரும் இரண்டு வித்தியாசமான கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடுவார். நமது பந்துவீச்சை யாராவது ஒரு பேட்ஸ்மேன் பவுண்டரி அடித்து விட்டால் நமது அருகில் வந்து அந்த பேட்ஸ்மேனை திருப்பி அடிக்க பவுன்சர் வீச சொல்வார்ர விராட் கோலி. நம்மிடம் ஆற்றலை புதுத்துவார் அவர்.

அதேபோல் ரோஹித் சர்மாவை பார்த்தால் அமைதியாக இருப்பார். அவர் அருகில் வந்து உங்களுக்கு நம்பிக்கை கொடுப்பார். நமக்கு தேவையான, சிறந்த இடத்தைப் பொறுத்து பந்துவீச கூறுவார் ரோஹித் சர்மா. எந்தப் பந்து வீச வேண்டும் என்று உங்களுக்கு தெரியும் அதே போல் வீசுங்கள் என்று கூறுவார்கள் ரோஹித் சர்மா. நான் விராட் கோலியின் தலைமையில் விளையாடத்தான் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் கலில் அகமது

Mohamed:

This website uses cookies.