ஐ.பி.எல் 2 வது போட்டியில் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி அபார வெற்றி..

ஐ. பி.எல் தொடரின் 2 வது ஆட்டமாக கிங்ஸ் லெவென் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பங்கேற்கும் ஆட்டம் சண்டிகாரில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.பின்னர் களமிறங்கிய டெல்லி அணி போட்டியின் முதலில் தனது நிதானமா ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க வீரராக கௌதம் கம்பிர் காலத்தில் இறங்கினார் இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 42 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார்.அவருடன் களமிறங்கிய முன்ரோ 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆதமிழந்தார். பின்னர் களமிறங்கிய சிரியாஸ் ஐயர் 11 பந்துகளில் 11 ரன்கள் மற்றும் விஜய் சங்கர் 13 பந்துகளில் 13 ரன்கள் ,ரிஷாப் பண்ட் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ராகுல் திவாடியா 7 பந்துகள் 9 ரன்கள் அடித்தார்.கிறிஸ் மோரிஸ் 16 பந்துகள் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பஞ்சாப் அணியின் சார்பாக அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.பின்னர் டெல்லி அணி பஞ்சாப் அணிக்கு 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.

பின்னர் காலத்தில் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் களம் இறங்கினர். ராகுல் தனது அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணிக்கு மிக பெரிய அளவில் பலம் சேர்த்தார்.4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்து ஐ. பி.எல் வரலாற்றில் அதிவேக அரைசதம் கடந்தார்.16 பந்துகள் விளையாடி 51 ரன்கள் எடுத்துள்ளார். அவருடன் களம் இறங்கிய அகர்வால் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்துள்ளார்.யுவராஜ் சிங் 22 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய கருன் நாயர் தனது சிறப்பான ஆட்டத்தால் 33 பந்துகள்  விளையாடி 50 ரங்களுடன் தனது அரைசத்தத்தை பதிவு செய்தார்.அதன் பிறகு களம் இறங்கிய மில்லர் 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். 18.5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வென்றது.

டெல்லி அணிக்காக கிரிஷ் மொரிஸ்,டேனியல் ,ராகுல் ,போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்த தொடரின் மூலம் லோகேஷ் ராகுல் அடித்த அரைசதம் மூலம் பஞ்சாப் அணி எளிதாக வென்றது குறிப்பிடதக்கது.

Surendhar B:

This website uses cookies.