கிங்ஸ் லெவன் அதிரடி வீரருக்கு திடீர் திருமணம்!!
உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக அநாசயமாக ரன்களை குவித்து வரும் கிங்ஸ் லெவன் பாஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மயான்க் அகர்வாலுக்கு தனது நீண்ட நாள் தோழி ஆசிதா சூட் உடன் திருமணம் ஆக உள்ளது.
தற்போது 27 வயதாகும் மயான்க் உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக ஆடி வருகிறார். இந்த வருட துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருந்த மயான்க், தற்போது திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். இந்த செய்தியை தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அழகான போட்டோவுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் தான் ‘எனது தோழியை திருமணம் செய்துகொள்ள சொல்லி ப்ரபோஸ்’ செய்தேன். அதற்கு அவள் தடுமாறாமால் சரி என கூறினாள்.
Cannot describe this feeling in words
பின்னர் திருமணம் நிச்சயம் செய்தோம் எனவும் கூறியுள்ளார்.
தற்போது அவர்களது குடும்பம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மயான்க் அகர்வால் உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக ஆடி வருகிறார். மேலும், கடந்த 2010ல் இருந்து ஐபிஎல் தொடர்களிலும் அசத்தி வருகிறார். முதலில், ராஜஸ்தான் அணிக்காக ஆடிய அவர், பின்னர் டெல்லி மற்றும் பெங்களூர் அணிக்காகவும், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் ஆடினார்.
தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஏனேனில் 2017-18 உள்ளூர் சீசனில் இவர்தான் அதிக ரன்களை குவித்தவர். ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, தியோதர் கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை என அனைத்திலும் சேர்த்து 2141 ரன்களை குவித்தார்.
இதனால் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டார். ஆனால், இந்த ஐபிஎல் தொடரில்.பெரிதாக எதும் சாதிக்கவில்லை. இவருடைய திருமண வாழ்க்கையை ஸ்போர்ட்ஸ்விக்கி தமிழ் வாழ்த்துகிறது.