தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவியை பறிக்க புதிய திட்டம் போடும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம்! புதிய கேப்டன் யார் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மிகச் சிறந்த அணியாக இருந்து வருகிறது. இதுவரை 2 முறை கௌதம் காம்பீர் தலைமையில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. சென்றமுறை கவுதம் காம்பீர் கொல்கத்தா அணியில் இருந்து தனது சொந்த மாநிலமான டெல்லி கேப்பிடல் அணிக்கு சென்றார் அதன் பின்னர் அந்த அணியின் கேப்டனாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் அண்டனி நன்றாக செயல்பட்டது. சென்ற வருடம் கூட முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றது இருந்தாலும் முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டு பிளே-ஆப் சுற்றுக்கு கூட செல்லவில்லை. இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் மீது அணியின் வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கு அதிருப்தி இருக்கிறது என்றே தெரிகிறது. இந்நிலையில் அந்த அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிரெண்டன் மெக்கல்லம் இந்த வருடம் முதல் அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார்.
மேலும் புதிய பயிற்சியாளர் வந்துவிட்ட நிலையில் அணியை மறுகட்டமைப்பு செய்ய காத்திருக்கிறார் பிரண்டன் மெக்கல்லம். அதனை தாண்டி பிரண்டன் மெக்கல்லம் தினேஷ் கார்த்திக் இடமிருந்து கேப்டன் பதவியை பறிக்க புதிய திட்டத்தை தீட்டி வருகிறார். அதாவது அணியில் இளம் வீரராக இருக்கும் சுப்மன் கில்லுக்கு கேப்டன் பொறுப்புகள் சிலவற்றை கொடுப்பதாக கூறுகிறார். அவர் கூறுகையில்…
சுப்மன் கில் ஒரு அருமையான ஆட்டக்காரர். அவர் இளம் வீரராக இருக்கிறார். அவரிடம் பல திறமை இருக்கிறது. மேலும், தற்போது இருந்தே அவரை தலைமைப் பொறுப்பிற்காக தயார் படுத்தப் போகிறோம். மேலும், அவரிடம் ஒரு சில தலைமை பொறுப்பு வேலைகளும் கொடுக்கப்படப் போகிறது. இதனை அவர் சரியாக செய்வார் என்று நினைக்கிறேன்.
அணியில் இளம் வீரராக இருப்பதால் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கக் கூடாது என்றெல்லாம் நான் நினைக்கவில்லை இதற்காகவே அவரை இப்போதிருந்தே தயார்படுத்தி வருகிறேன். தினேஷ் கார்த்திக் நல்ல வீரர்தான். இந்திய அணியின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்கள் ஒருவர். விக்கெட் கீப்பர் பணியை அவர் மிகச் சிறப்பாக செய்து வருகிறார் என்று இலைமறைகாயாக மறைமுகமாக தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப் வெகு சீக்கிரத்தில் பறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் பிரண்டன் மெக்கல்லம்.