கொல்கத்தாவிடம் போராடி வீழ்ந்த பஞ்சாப்; ட்விட்டர் ரியாக்சன்
ஐ.பி.எல் டி.20 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் இன்றைய முதல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் 75 ரன்களும், தினேஷ் கார்த்திக் 50 ரன்களும், ரசல் 31 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 245 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல் ராகுல் 66 ரன்களும், அஸ்வின் 45 ரன்களும், ஆரோன் பின்ச் 31 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்த போட்டியில் வெற்றி அசத்தல் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.