கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர் தான்!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர்களை அந்த அணியின் நிர்வாகம் குழு நியமித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. குறிப்பாக, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. லீக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கையில், கேப்டன் பேச்சுக்கு மதிப்பு இல்லை என தினேஷ் கார்த்திக் குற்றம் சாட்டினார். அதேபோல் ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரஸ்ஸல் அணியில் தெளிவான முடிவு எடுக்கப்படாமல், குளறுபடி நிலவி வருகிறது என்பதை பகிரங்கமாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனால் வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அணியில் சில மாற்றங்களைக் கொண்டுவர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்து, அதை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அதில் முதல் கட்டமாக தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர் இருவரையும் மாற்றம் செய்துள்ளது.

இதுவரை தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஜாக்குவஸ் காலிஸ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த டிரவர் பிளைஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை பயிற்சியாளர் பதவியில் இருந்து வந்த சைமன் காட்டிச் நீக்கப்பட்டுள்ளார். துணை பயிற்சியாளர் பதவி நீக்கப்பட்டு, அதற்க்கு பதிலாக ஆலோசகர் பதவி புதிதாக அமல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட இருக்கிறார்.

மேலும் தினேஷ் கார்த்திக் செயல்பாடு ஐபிஎல் மற்றும் இந்திய அணியிலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததனால், அதிலும் மாற்றம் கொண்டுவர அணி நிர்வாகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது குறித்த முழு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சேர்மன் தெரிவித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.