டி20 கேப்டனாக இவர் சரிப்பட்டு வரமாட்டார் ! சேவாக் கைகாட்டிய அந்த ஐபிஎல் கேப்டன் யார் ?
இந்த சீசனில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளி பட்டியலில் 2 புள்ளிகள் மற்றும் -0.700 நெட் ரன் ரேட் பெற்று 6வது இடத்தில் உள்ளது.
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் மோர்கன் கொல்கத்தாவுக்கு 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தந்தார். இதனால் இவரை அனைவரும் பாராட்டி வந்தனர். ஆனால் இதன்பிறகு நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மோசமாக தோல்வியை பெற்று தந்திருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 10 ரன்னிலும், பெங்களூர் அணிக்கு எதிராக 38 ரன்னிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 18 அணிக்கு எதிராக ரன்னிலும் தோல்வி அடைந்துள்ளது. இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா அணி தற்போது மோசமான பார்மில் இருப்பதற்கு இயான் மோர்கன் தான் காரணம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் இயான் மோர்கன் சிறந்த டி20 கேப்டன் என்று நான் நினைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில் “உலகளவில் டி20 போட்டிகளுக்கான கேப்டனில் இயான் மோர்கன் சிறந்தவராக எனக்கு தெரியவில்லை.
மோர்கன் ஒருநாள் தொடரில் வேண்டுமானலும் சிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால் டி20 போட்டிகளில் கிடையாது. இங்கிலாந்து அணியில் எந்த வீரர் பேட்டிங் செய்தாலும், பவுலிங் செய்தாலும் மோர்கனுக்கு வெற்றி பெற்று தருவார்கள். ஆனால் ஐபிஎல்லில் அப்படி கிடையாது. மோர்கன் ஐபிஎல்லில் சிறந்த அணியை அமைக்க வேண்டும். இதனால், மோர்கன் டி20 போட்டிகளுக்கு சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கவில்லை” என்று பேசியிருக்கிறார்.