அடப்பாவிங்களா… ஒரே போட்டியில் ஆர்சிபி மட்டுமல்ல, சிஎஸ்கே அணியையும் வீழ்த்திய செய்த கொல்கத்தா ஸ்பின்னர்கள்.. சிஎஸ்கேவின் 11 வருட ரெக்கார்ட் முறியடிப்பு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில், கொல்கத்தா ஸ்பின்னர்கள் 81 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது மட்டுமல்லாது, சிஎஸ்கே அணியிடம் இருந்த 11 வருட ரெக்கார்டை முறியடித்துள்ளனர். கொல்கத்தா ஸ்பின்னர்கள் செய்த சாதனை மற்றும் பட்டியலை பின்வருமாறு காண்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. இது டாஸை இழந்த கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய நிர்பந்திக்கபட்டது.

கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் குர்பாஸ் 57 ரன்கள், சர்துல் தாக்கூர் 68(29) ரன்கள் அடித்து அசத்தினர். ரிங்கு சிங் 46 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் குவித்தது.

இதனை சேஸ் செய்தபோது விராட் கோலியின் விக்கெட்டை எடுத்து கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை கொடுத்தார் சுனில் நரேன். அடுத்த ஓவரில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பின்னர் ஹர்ஷல் பட்டேலை(0) போல்டு செய்தார்.

அறிமுக வீரர் சுயாஸ் சர்மா தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்து அசத்த, ஆர்சிபி அணி ஆட்டம் கண்டது.

இறுதியில் ஆர்சிபி அணி 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

வருண் சக்ரவர்த்தி 3.4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். சுனில் நரேன் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அறிமுகவீரர் சுயாஸ் சர்மா 4 ஓவர்களில்30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இப்போட்டியில் கொல்கத்தா ஸ்பின்னர்கள் மூவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட் படைத்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை ஒரு இன்னிங்சில் ஸ்பின்னர்கள் சேர்ந்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை 2012ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி டெல்லி அணிக்கெதிராக(அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ்) செய்திருந்தது.

இந்தாண்டு ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சிஎஸ்கே அணியின் ரெக்கார்ட் முறியடிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியை பின்னே தள்ளி முதலிடம் பிடித்தது கொல்கத்தா.

ஒரு இன்னிங்சில் ஸ்பின்னர்கள் சேர்ந்து வீழ்த்திய அதிக விக்கெட்டுகள் மற்றும் அணிகள் பட்டியல்:

1. 9 விக்கெட்டுகள் – கொல்கத்தா அணி – 2023

2. 8 விக்கெட்டுகள் – சென்னை அணி – 2012

3. 8 விக்கெட்டுகள் – சென்னை அணி – 2019

4. 8 விக்கெட்டுகள் – சென்னை அணி – 2019

 

Mohamed:

This website uses cookies.