பஞ்சாப்பின் பந்துவீச்சை சிதறடித்து சரித்திரம் படைத்த கொல்கத்தா; கொண்டாடும் ரசிகர்கள்
ஐ.பி.எல் டி.20 தொடரில் பஞ்சாப் அணியுடனான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.
இந்தூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக களமிங்கிய லின், நரேன் வலுவான அடித்தளத்தை அமைத்தனர். லின் 17 பந்தில் 27 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தாலும்
நரேன் தன் அதிரடியை தொடர்ந்தார். உத்தப்பாவுடன் சேர்ந்த நரேன் 36 பந்தில் 4 சிக்ஸர், 9 பவுண்டரி விளாசி 75 ரன்கள் குவித்தார். உத்தப்பா 24ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து இணைந்த ரசல், தினேஷ் கார்த்திக் இணை பஞ்சாப் பவுலிங்கை அடித்து நொருக்கியது. ரசல் 14 பந்தில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து 31 ரன்களும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 50 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி 245 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி குவித்துள்ள 245 ரன்களே ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரிலும் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும், அதே போல் இந்த தொடரிலும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான்.
இன்றைய போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம் மிக மிக குறுகிய பவுண்டரி எல்லைகளை கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கொல்கத்தா அணியின் இந்த ருத்ரதாண்டவத்தை கொல்கத்தா ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
அதில் சில;