கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்துள்ளது.
14 ஐபிஎல் சீசன் தொடரில் இன்றைய போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மார்கன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரரான க்வின் டன் டிகாக் 2 ரன்கள் எடுத்த நிலையில் வருன் சக்கரவர்த்தியிடம் தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிதானமாக ரன்களை குவித்தது, இதில் ரோஹித் சர்மா 32 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் இடம் தனது விக்கெட்டை இழந்தார்,அதேபோன்று சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் அல் ஹசனிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இருந்தபோதும் 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் பிரசாத் கிருஷ்ணாவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் அந்த அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று எதிர்பார்த்த அந்த அணியின் நட்சத்திர வீரர் பொலார்ட் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின் அதனை தொடர்ந்து கிருனால் பாண்டியா 9 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து தனது விக்கெட்டை இழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் ரசல் 5 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்களும், வருன் சக்கரவர்த்தி,ஷகிப் அல் ஹசன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடி வருகிறது.