எல்லாம் இவர் வந்த ராசி… மும்பையை ஈசியாக வீழ்த்தி முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; பாராட்டும் ரசிகர்கள் !!

எல்லாம் இவர் வந்த ராசி… மும்பையை ஈசியாக வீழ்த்தி முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; பாராட்டும் ரசிகர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதல் டீமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 60வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. மழை காரணமாக தலா 16 ஓவராக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக்  பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்பின் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவிற்கு அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களும், நிதிஷ் ராணா 33 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 157 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திலக் வர்மா 17 பந்துகளில் 32 ரன்களும், இஷான் கிஷன் 40 ரன்களும், நமன் ஓஜா 6 பந்தில் 17 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் சீனியர் வீரர்களின் பொறுப்பற்ற பேட்டிங்காலும், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா உள்ளிட்ட கொல்கத்தா வீரர்களின் சிறப்பான பந்துவீச்சாலும் 16 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியுடன் சேர்த்து 18 புள்ளிகளுடன் முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடர் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்த வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் உள்ளிட்ட வீரர்களை பாராட்டும் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கவுதம் கம்பீர் மற்றும் அபிசேக் நாயர் ஆகியோரின் வருகையே கொல்கத்தாவின் இந்த மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் எனவும் பாராட்டி வருகின்றனர்.

அதில் சில;

 

 

 

Mohamed:

This website uses cookies.