என்னா அடிடா யப்பா… சதம் அடித்து சரியான பதிலடி கொடுத்த ஹாரி ப்ரூக்; வியந்து பாராட்டும் கிரிக்கெட் உலகம் !!

என்னா அடிடா யப்பா… சதம் அடித்து சரியான பதிலடி கொடுத்த ஹாரி ப்ரூக்; வியந்து பாராட்டும் கிரிக்கெட் உலகம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய ஹாரி ப்ரூக்கிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

16வது ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு மாயன்க் அகர்வால் (9) மற்றும் ராகுல் திரிபாதி (9) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். சமகால கிரிக்கெட்டின் ஆபத்தான இளம் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவரான ஹாரி ப்ரூக், கடந்த போட்டிகளில் சொதப்பியதால் தான் எதிர்கொண்ட அனைத்து விமர்ச்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கேப்டன் மார்கரம் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த அபிசேக் சர்மா 32 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 6 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து கொடுத்தனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் 55 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 228 ரன்கள் குவித்தது.

இந்தநிலையில், தன் மீதான அனைத்து விமர்ச்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி நடப்பு தொடரில் முதல் சதமும் அடித்து அசத்திய ஹாரி ப்ரூக்கிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் என பலரும் ஹாரி ப்ரூக்கை சமகால கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என பாராட்டி வருகின்றனர்.

அதில் சில;

 

Mohamed:

This website uses cookies.