கெத்து டீமும் நாங்க தான்… வெத்து டீமும் நாங்க தான்; ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி !!

கெத்து டீமும் நாங்க தான்… வெத்து டீமும் நாங்க தான்; ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 113 ரன்களில் ஆல் அவுட்டான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இதன் மூலம் மிக மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பயம் இல்லாத ருத்ரதாண்டவ பேட்டிங்கை வெளிப்படுத்திய பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மார்ச் 24ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்து ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற வரலாற்றை படைத்தது. அது மட்டும் இல்லாமல் அடுத்த சில தினங்களில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 287 ரன்கள் குவித்து தனது சொந்த சாதனையை தானே முறியடித்து பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

கடந்த தொடர்களில் மிக மோசமான தோல்விகளை சந்தித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த முறை பயமே இல்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஹைதராபாத் அணி முதன்மையான அணியாக பார்க்கப்பட்டது.

மிரட்டல் வெற்றிகளின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஹைதராபாத் அணி, முதல் குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தாலும், இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கெத்தாக வீழ்த்தி இறுதி  போட்டிக்கு தகுதி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி, டாஸ் வென்று சம்பந்தமே இல்லாமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அதில் வெறும் 113 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதன்பின் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் போட்டியை முடித்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்தநிலையில், இறுதி போட்டியில் வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் 300 ரன்களை கடக்க முடியும் என்றால் அது ஹைதராபாத் அணியால் மட்டும் தான் முடியும் என்ற அளவிற்கான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஹைதராபாத் அணி, முக்கியமான இறுதி போட்டியில் சொதப்பி வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் மூலம், ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மிக குறைவான ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 125 ரன்கள் எடுத்திருந்ததே இத்தனை வருடங்களாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது, தற்போது இதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முறியடித்து மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.

இறுதி போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணிகள்;

113 – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 2024ம் ஆண்டு

125/9 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – 2023ம் ஆண்டு

128/6 – புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – 2017ம் ஆண்டு

 

Mohamed:

This website uses cookies.