ரிங்கு சிங்னா பிளவர் கிடையாது ஃபயர்… ரிங்கு சிங்கை வெகுவாக பாராட்டிய முன்னாள் ஜாம்பவான்..
அனைவரும் கொல்கத்தா அணி தோல்வி அடையும்னு நினச்சாங்க ஆனால் ரிங்கு சிங் அப்படி நினைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது கைஃப் தெரிவித்துள்ளார் .
2023 ஐபிஎல் தொடர் தற்போது போட்டிக்கு போட்டி விறுவிறுப்பாக மாறத் தூங்கி உள்ளது, குறிப்பாக ஏப்ரல் 9ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டி வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக மாறியுள்ளது.
கடைசி ஓவரில் 29 ரன்கள் அடித்தால் வெற்றி என்பதால் தீவிர கொல்கத்தா ரசிகர்களே குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுவிட்டது என்று டிவியை ஆப் செய்திருந்த நிலையில் ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்சர்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது மட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்துள்ளார்.
இவருடைய இந்த ருத்ர தாண்டவமான ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வட்டத்திலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்தவகையில்., இந்திய கிரிக்கெட் குறித்தும் ஐபிஎல் தொடர் குறித்தும், அதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் குறித்தும் வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வரும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது கைஃப்., கொல்கத்தா அணிக்காக அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங்கை செய்தியாளர் சந்திப்பில் வாயிலாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து முகமது கைஃப் பேசுகையில்., “ரிங்கு சிங் வயசில் தான் விராட் கோலி கிரிக்கெட்டை நன்றாக விளையாட ஆரம்பித்தார். ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் விராட் கோலி ஐந்து முதல் ஆறு வருடங்கள் தன் திறமை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அதேபோன்று தான் தற்போது ரிங்கு சிங் செயல்படுகிறார்.அவருடைய ஆட்டம் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக அவர் கடைசி பந்தில் அடித்த சிக்சர் ஒட்டுமொத்த மைதானத்தையுமே வேறு மாதிரி மாற்றிவிட்டது. கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்பதை யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை, அனைவரும் டிவியை ஆப் செய்து விட்டு கிளம்பிவிட்டனர். ஆனால் ரிங்கு சிங் அப்படி நம்பவில்லை” என்று ரிங்கு சிங் குறித்து முகமது கைஃப் பாராட்டி பேசியிருந்தார்.