மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளதால், விராட் கோலி மற்றும் அணியினர் மிகவும் உற்சாகமாக உள்ளனர். நான்கு நாட்கள் தீவிர விளையாட்டில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கியது. டெஸ்ட் போட்டியில் 1-0 என்று முன்னிலையில் இருக்கும் இந்திய அணியினர் கரீபியன் தீவுகளில் நேரம் செலவழித்து வருகிறார்கள். பாலிவுட் நடிகையாக அனுஷ்கா ஷர்மா, தன்னுடைய கணவருடன் மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவரும் வீரர்களுடன் இணைந்து ‘போட் பார்ட்டி’க்கு சென்றுள்ளார்.
கே எல் ராகுல், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிர்ந்தார். அதில், விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா, அஸ்வின் மற்றும் மயங்க் அகல்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எல்லோரும் சிரித்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். ராகுல், இந்தப் புகைப்படத்தை, “முடிவில்லா நீலம்” (Endless blues) என்று பதிவிட்டுள்ளார்.
“கடலும், சூரிய மறைவும் மிக சிறந்த காம்பினேஷன்” என்று அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ரவிசந்திரன் அஸ்வின் பதிவிட்டார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியை இந்திய அணி ஆகஸ்ட் 30ம் தேதி ஜமைக்காவில் ஆடவுள்ளது. இந்திய அணி டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டியில் 2-0 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் (கணவன் மனைவி) விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் வந்த இந்த படகில் மற்ற வீரர்கள் தங்களுக்கு ஏற்ற நவநாகரீகமான உடை அணிந்து இருந்தனர். இதில் கேஎல் ராகுல் மட்டும் ஒரே ஒரு சிறிய உள்ளாடை மட்டும் அணிந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் கணவன் மனைவி இருக்கும் இடத்தில் இப்படித்தான் இருப்பதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பெண்களைப் பற்றியும் ஒரு மாதிரியாக ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசி சர்ச்சையில் மாட்டியிருந்தார் கேஎல் ராகுல்.