லாக் டவுன் நேரத்தில் ரசிகர்களிடம் வித்யாசமான அறிவுரை கேட்ட கே.எல் ராகுல்!

கே.எல்.ராகுல் அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ரசிகர்களிடம் முடி வெட்ட வேண்டுமா, வேண்டாமா என்று அறிவுரையைக் கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்தநிலையில் இந்த லாக் டவுன்
காரணமாக அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களுடைய நேரத்தை வீட்டிலேயே செலவழித்து வருகிறார்கள்.

தற்போது லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், பல ஆண்களுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பது முடி வளர்ச்சி. அதிகப்படியாக முடி வளர்வதால், அதைக் கட் செய்ய, முகச்சவரம் செய்ய சலூன் கடைகள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில், அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலான கேள்வி, வீட்டிலேயே முடி வெட்டிக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பது தான். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஹேர்கட் செய்யக் குழப்பத்தில் உள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ரசிகர்களிடம் முடி வெட்ட வேண்டுமா, வேண்டாமா என்று அறிவுரைக் கேட்டு வருகிறார். அவரது கேள்விக்கு ரசிகர்கள் பல யோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. எனினும் தி ஹண்ட்ரெட் போட்டியை ஒத்திவைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
BIRMINGHAM, ENGLAND – AUGUST 02: England bowler Sam Curran celebrates after bowling India batsman KL Rahul during day two of the First Specsavers Test Match between England and India at Edgbaston on August 2, 2018 in Birmingham, England. (Photo by Stu Forster/Getty Images)
ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

 

Sathish Kumar:

This website uses cookies.