எதிரணியின் இளம் வீரருக்கு களத்திலேயே வைத்து ஆறுதல் கூறிய கேஎல் ராகுல் !நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய இளம் வீரர் !

எதிரணியின் இளம் வீரருக்கு களத்திலேயே வைத்து ஆறுதல் கூறிய கேஎல் ராகுல் ! நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய இளம் வீரர் !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி அபாரமாக விளையாடிய 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.

இதற்கு கடைசியில் 18 ஓவர்களில் 150 ரன்கள் சேர்த்த ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெரும் துணையாக இருந்தனர். அதன் பின்னர் 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல்தான் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதுபோலவே ஆஸ்திரேலிய அணியின் சார்பாக வெறும் 21 வயதான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் எனும் இளம் வீரர் அறிமுகமாகி விளையாடினார். தனது முதல் போட்டியிலேயே தனது முழு பங்களிப்பையும் கொடுத்தார்.

பந்துவீச்சிலும் நன்றாக செயல்பட்டு பேட்டிங்கிலும் ஓரளவிற்கு ஆடினார் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவர் பேட்டிங்கில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து 27 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் கேமரூன் கிரீன் முதன்முதலாக தான் களத்தில் இறங்கி ஆடிய போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் தனக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி ஊக்கம் அளித்ததாக கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் பேட்டை தூக்கி விட்டு களத்திற்குள் சென்று நின்றேன். அப்போது சிறிது நடுக்கத்துடனே முதல் போட்டியில் விளையாடினேன். இயல்பாக என்னால் விளையாட முடியவில்லை. அந்த நேரத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த கே.எல் ராகுல் என்னை பார்த்து முதல் போட்டியில் விளையாடுகிறாயா உனக்கு நடுக்கம் அதிகமாக இருக்கிறது. அதையெல்லாம் பற்றி கவலைப்படாதே மிகச் சிறப்பாக ஆடு என்று ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை கூறினார். இந்த வார்த்தைகளை நான் எப்போதும் மறக்கமாட்டேன். அது எனது மிகப்பெரிய நினைவுக் காலம். முழுதும் நிலைத்து நிற்கும்” என்று மனம் நெகிழ பேசினார் கேமரூன் கிரீன்.

Prabhu Soundar:

This website uses cookies.