கே.எல் ராகுல் பஞ்சாப் நடிகை சோனம் பாஜ்வாவுடன் காதல்?

கே.எல் ராகுல் பஞ்சாப் நடிகை சோனம் பாஜ்வாவுடன் காதல்?

இந்திய அணியின் நட்சத்திர ஓப்பனிங் பேட்மேன் கே.எல் ராகுல் தற்போது முரட்டு தனமாக பார்மில் உள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடி, எதிரணி பந்து வீச்சாளர்களை பஞ்சாய் பறக்கவிட்டார். தற்போது இந்திய அணிக்காக களம் இறங்கிய இவர் அயர்லாந்து அணியை தவிடு பொடியாக்கினார்.

கர்நாடகாவை சேர்ந்த இவருக்கு கேரளா தான் பூர்வீகம். பாதிக்க ஹஸ்கி டஸ்கியாக இருக்கும் இவர் இன்னும் காதலில் விழவில்லை. ஆனால் அடுத்தருடபு வதந்திகள் பரவி வருகிறது. 25 வயதாகும் இவர் கடந்த மாதம் பாலிவுட் நடிகை நிதி அகர்வாலுடன் இருந்த புகைப்படங்கள் வெளியானது.

ஐபிஎல் முடிந்த கையோடு நிதி அகர்வாலுடன் ஒரு ஓட்டலில் உணவு அருந்தியபடியும், ஒரே காரில் சென்றபடியும் போட்ட்டோக்கள் வைரல் ஆனது. இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர் என தீயாய் பரவியது செய்திகள்.

ஆனால் பின்னர் தங்களுக்குள் அப்படி ஏதும் இல்லை என விளக்கம் அளித்தனர். மேலும், இருவரும் டீன் ஏஜில் இருந்தே ஒருவரை ஒருவர் தெரியும் எனவும் விளக்கம் அளித்தனர்.

அதனை தாண்டி தற்போது ஒத்த கருபழகன் கே.எல் ராகுல் பஞ்சாப் நடிகையின் அழகில் விழுந்திருப்பதாக தெரிகிறது. நேரடியாக இலை எனினும் அவரது நடவடிக்கைகள் அவ்வாறு தான் உள்ளது.

சோனம் பஜ்வா ஒரு பஞ்சாப் நடிகை ஆகும். தற்போது 25 வயதாகும் அவர் பஞ்சாபில் முன்னணி நடிகையாவார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனம் பாஜ்வா, பொதுவாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

 


‘சூரிய மறைவை பாரர்த்துக்கொண்டே உன்னைப் பற்றி நினைத்து கொண்டிருக்கிறேன்’

என தனது புகைப்படத்தை வைத்து அதற்கேற்றவேறு பதிவு செய்திருந்தார்.

அதற்கு கே.எல் ராகுல்,

‘ஒரு போன் செய்தால் வந்துவிடுவேன், அவ்வளவு பக்கத்தில் தான் உள்ளேன்’

என கமெண்ட் அடித்துள்ளார்.

அதேபோல் பல நாட்களுக்கு முன்னர்,

‘இன்று இரவு டேட்டிங் செல்கிறேன்’ என பதிவு செய்திருந்தார் சோனம்.

இதனை பார்த்த கே.எல் ராகுல்,

என்ன?? டேட்டிங்கா ??? என்பதை போல ஒரு எமோஜி கமெண்ட் செய்திருந்தார்.

இதனால் கே.எல் ராகுல் அவரிடம் காதலில் விழுந்திருக்கலாம் என செய்திகள் வந்துள்ளது.

Editor:

This website uses cookies.