தோத்தாலும் ஜெயிச்சாலும் அந்த பையன் வேற லெவல் தான்; இந்திய பந்துவீச்சாளரை உயர்த்திப் பேசிய கே எல் ராகுல்!

இரண்டு போட்டிகளில் சரியாக செயல்படவில்லை என்பதற்காக அவரின் தரத்தை குறைத்துப் பேச முடியாது. அவர் சிறந்த வீரர் என இந்திய வேகப்பந்துவீச்சாளரை புகழ்ந்து பேசியிருக்கிறார் கே எல் ராகுல்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்து மிகவும் திணறி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இமாலய ரன்களை குவித்தனர்.

முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது. இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா முதல் போட்டியில் 10 ஓவர்களுக்கு 73 ரன்கள் விட்டுக்கொடுத்து வெறும் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார். அதேபோல இரண்டாவது போட்டியிலும் 10 ஓவர்களுக்கு 79 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

நட்சத்திர வீரராக கருதப்படும் பும்ரா சராசரிக்கும் குறைவாகவே பர்பார்ம் செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் பும்ராவின் தரம் குறித்து பேசிய கே எல் ராகுல், அவர் எந்த அளவிற்கு சிறந்தவர் என்பது குறித்து பேசியிருக்கிறார். கே எல் ராகுல் அளித்த பேட்டியில்,

“கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அதனால் வீரர்கள் மீண்டும் நிலைமைக்கு திரும்ப சிறிது நேரம் எடுக்கும். இரண்டு போட்டிகளில் சரியாக செயல்படவில்லை என்பதற்காக அவரது தரத்தை குறைத்துபி பேச இயலாது. பும்ரா போன்ற சாம்பியன் வீரர்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்த நீண்டகாலம் எடுக்க மாட்டார்கள். அவரைப் போன்ற வீரர்கள் நிச்சயம் அணிக்கு வேண்டும்.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மைதானங்கள் நன்கு பேட்டிங் ஆடக்கூடிய மைதானங்கள். பல ஜாம்பவான் பவுலர்கள் இந்த மைதானங்களில் திணறி இருப்பதை நாம் கண்டிருப்போம். ஆதலால் 1 அல்லது 2 போட்டிகளுக்காக சாம்பியன் வீரர்களை விமர்சனம் செய்ய இயலாது என்பது என் கருத்து.

இந்திய அணிகளுள் எந்தவித சலசலப்பும் இல்லை. நல்ல மனநிலையில் நிலவிவருகிறது. இது ஆஸ்திரேலிய அணிக்கு சொந்த மைதானம். அவர்களுக்கு நிகராக நாங்கள் பர்பார்ம் செய்து வருகிறோம். நன்கு கூர்ந்து கவனித்தால் அனைவருக்கும் புரியும்.” என பேசியிருக்கிறார்.

Mohamed:

This website uses cookies.