குழந்தைகளுக்கு உதவுவதற்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார் கே.எல் ராகுல் !!

குழந்தைகளுக்கு உதவுவதற்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார் கே.எல் ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் நேற்று தனது 28 ஆவது பிறந்தாளை கொண்டாடினார். இதற்கிடையில் பிறந்தநாளில் வீடியோ தகவல் ஒன்றை ராகுல் வெளியிட்டார்.

அதில் கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் பயன்படுத்திய பேட் உள்ளிட்ட பொருட்களை ராகுல் ஏலம் விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை அறக்கட்டளை மூலமாக குழந்தைகளுக்கு கொடுக்க ராகுல் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் கூறுகையில்,“நான் எனது கிரிக்கெட் பேட், கிளவுஸ், ஹெல்மெட், மற்றும் சில ஜெர்சிகளை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன். அதில் வரும் நிதி அவேர் அறக்கட்டளைக்கு செல்லும். அந்த அறக்கட்டளை குழந்தைகளுக்கு உதவும் அறக்கட்டளையாகும். இதைச் செய்ய இதை விட நல்ல நாள் இருக்க முடியாது. அதனால் இந்த ஏலத்தில் பங்கேற்று எனக்கும் குழந்தைகளுக்கு அன்பு காட்டுங்கள். இந்த இக்கட்டான நேரத்தில், பலமாக இருந்து இதில் இருந்து மீண்டு வருவோம்” என்றார்.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் 24 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 17,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 550 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mohamed:

This website uses cookies.