ஆமா.. நான் சுயநலமா தான் விளையாடினேன்; உண்மையை ஒப்புக்கொண்ட முக்கிய வீரர் !!

ஆமா.. நான் சுயநலமா தான் விளையாடினேன்; உண்மையை ஒப்புக்கொண்ட முக்கிய வீரர்

தொடர்ந்து சொதப்பி வந்த கே.எல் ராகுல், இந்திய அணியில் தனக்கான உறுதிபடுத்தி கொண்ட சூசகத்தை ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் இளம் வீரரான கே.எல் ராகுல், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் தொடர்ந்து பெற்று வருகிறார். பிரையன் லாரா போன்ற ஜாம்பவான்களே ராகுலின் ஆட்டத்தை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.

2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் கே.எல் ராகுல் இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட கேஎல் ராகுல், இன்னமும் தனக்கு எட்டாக்கனியாக இருந்து வரும் டெஸ்ட் அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில், காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சையால் தடைபெற்ற கேஎல் ராகுல், அதன்பின்னர் தான் தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றியதாக தற்பொழுது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கேஎல் ராகுல், அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறேன் என்றால், அதற்கு எனது சிந்தனையையும் அணுகுமுறையையும் மாற்றியதுதான் காரணம். முன்பெல்லாம் நான் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று சுயநலமாக ஆடினேன்; தோற்றுவிட்டேன். தடைக்கு பிறகு, ”களத்திற்கு போய் அணிக்கு என்ன தேவையோ அதற்கேற்ப ஆடு” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, அணிக்காக ஆட ஆரம்பித்தேன். அதுதான் எனது சிறப்பான ஆட்டத்துக்கு காரணம் என்று ராகுல் தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.