சூப்பர் ஓவர் வரை சென்று நாங்கள் தோல்வி அடைந்ததற்கு இவர்தான் காரணம்! கேஎல் ராகுல் ஓபன் டாக்!
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இடையே நேற்று ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது முதலில் ஆடிய டெல்லி அணி 157 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெரிதாக ஏதும் செய்யவில்லை.
நன்றாக ஆடிய மயங்க் அகர்வால் மட்டும் 89 ரன்கள் அடிக்க அந்த அணி கடைசியாக வெற்றி பெற வேண்டிய போட்டியை கோட்டைவிட்டு டிரா செய்தது. இதன் காரணமாக சூப்பர் பவர் முடிவு செய்யப்பட்டு நடந்தது.
முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க அடுத்த இரண்டு பந்தில் 2 வீரர்களையும் விக்கெட் வீழ்த்தினார். தவிர இதன் காரணமாக 32 ஆக நிர்ணயிக்கப்பட்டு டெல்லி அணி போட்டியை கைப்பற்றியது. போட்டிக்குப் பின்னர் பேசிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது..
கடைசி 10 ஓவர்களை நான் மறக்க விரும்புகிறேன். மயங்க் அகர்வால் மிகவும் அற்புதமாக ஆடினார். போட்டியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று அவர் ஆடியது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடிவிட்டு திடீரென்று வந்த டி20 போட்டிகளில் அவர் போன்ற ஆடுவது மிகப் பெரிய காரியம். டாஸ் வென்று விட்டு நாங்கள் என்ன செய்வது என்று எங்களுக்குத் நன்றாக தெரியவில்லை. ஒரு கேப்டனாக இந்த தோல்வியை நான் எடுத்துக் கொள்கிறேன் இந்த தோல்விக்கு நாங்கள் மட்டுமே காரணம் என்று கூறியுள்ளார் கே எல் ராகுல்.